இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க் விஜயம் செய்துள்ள நிலையில், நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கையின் பேண்தகுதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் உறுதியளித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டமை குறித்தும் அவர் வரவேற்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது.