இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் எயார் கொமாண்டர் முஸ்தபா அன்வர், தலைமையிலான பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவினருடனான இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதேநேரம், குறித்த பாகிஸ்தான் குழுவினர், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவைவும், நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது