ஆறு இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, காயமடைந்த 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.1) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயம்
2) நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி தேவாலயம்
3) கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டல்
4) மட்டக்களப்பு, சீயோன் தேவாலயம்
5) கொழும்பு, சின்னமன் ஹோட்டல்
6) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்