ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (21.04.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது. 

கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மேற்படி குண்டு வெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு இச்சம்பவங்களின் சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள் ,எதிர்கால செயற்பாடுகள் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் என்பன குறித்து கட்சியின் தலைவர் விளக்கிக் கூறினார். இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.