கொழும்பு தேசிய வைத்தியசாலை – 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை – 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை – 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வைத்தியலாசையில் அனுமதிக்கப்பட்டவர்களில் படுகாயம் அடைந்த சிலர் மேலும் மரணித்துள்ளனர்.