இன்று கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள ரத்னம் ஒழுங்கையில், வாகனமொன்றில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குறித்த குண்டு வெடித்துள்ளது.இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கொழும்பு – புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெஸ்ட்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் 12 டெடனேட்டர்களும் அங்கு குப்பை குவிக்கப்பட்ட இடத்தில் 75 டெடனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது