Header image alt text

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

IS அமைப்பின் AMAQ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்புகொண்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் என அமெரிக்கா இதன் போது உறுதியளித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தி நட்புறவை மீள வலியுறுத்தியமை குறித்து இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். Read more

அநுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் பிரபல வியாபாரியொருவரின் வீடொன்றிலிருந்து வெடிப்பொருள்கள் தொகையொன்று நொச்சியாகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதே, பெருமளவிலான வெடிப்பொருள்கள் தொகையுடன் சந்தேகநபர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வானகங்கள், நபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நியுசிலாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். Read more

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பல்கலைகழகங்களில் நடத்தப்படவிருந்த பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.