சந்தேகத்திற்கிடமான வானகங்கள், நபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நியுசிலாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.