Header image alt text

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் பலரும் தற்பொழுது இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றமையை காணமுடிகின்றது.

இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, அடுத்த விமானத்திலேயே வெளியேறி செல்வதாகவும் கட்டுநாயக்க விமானநிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்பேற்று இவ்வாறு பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை உரிய வகையில் பயன்படுத்தி இடம்பெற்ற பாரிய இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமை காரணமாக ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. Read more

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகப்படும் வகையில் நபர்கள் மற்றும் வாகனங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து அறியக் கிடைத்தால், அதுபற்றி அறிவிக்க, இராணுவத் தலைமையகம் விசேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.

சந்தேகத்துக்கிடமான தகவல்கள் தொடர்பில் உடன் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு, இராணுவ தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தகவல்களை வழங்கவென, 011-2434251, 011-4055105, 011-4055106, 076-6911604, 011-24333335 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read more

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

அது வெள்ளிரும்புத் தயாரிக்கும் தொழிற்சாலையென அடையாளப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன. குறித்த தொழிற்சாலை கொழும்புக்குட்பட்ட வெல்லம்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத் தொழிற்சாலையில், தற்கொலை தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிப்பதற்காக ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளன. Read more

கேகாலை, வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH-3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பால் வெளியிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகன இலக்கப் பட்டியலில் இந்த இலக்கமும் உள்ளடங்கியிருந்தது. Read more