பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகப்படும் வகையில் நபர்கள் மற்றும் வாகனங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து அறியக் கிடைத்தால், அதுபற்றி அறிவிக்க, இராணுவத் தலைமையகம் விசேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.

சந்தேகத்துக்கிடமான தகவல்கள் தொடர்பில் உடன் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு, இராணுவ தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தகவல்களை வழங்கவென, 011-2434251, 011-4055105, 011-4055106, 076-6911604, 011-24333335 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.