கேகாலை, வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH-3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பால் வெளியிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகன இலக்கப் பட்டியலில் இந்த இலக்கமும் உள்ளடங்கியிருந்தது. புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க அப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டே போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றே இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அப் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் நான்கு வோக்கிடோக்கி கருவிகளும், மூன்று சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.