Header image alt text

தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷங்கிரி-லா ஹோட்டல்மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரிலேயே குறித்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மௌலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தின்பேரில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20ம் திகதி இரவு 9.00 மணியளவில் ஏற்றுவதற்காக கார் ஒன்றில் பொதியுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார். Read more

விமான பயணிகள் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நிலமைகள் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும், இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதித் தடைகளை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read more

பலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த வீட்டில் இருந்து டெப் ஒன்றும், 3 தொலைபேசிகளும், 13 சிம் கார்ட்களும், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

கடந்த 21ம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையும், இரவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். திரப்பனையில் 4 பேரும், இரக்குவானையில் 3 பேரும், வவுணதீவு மற்றும் மீகலாவை பிரதேசங்களில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.

இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம். காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கையில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எப்.பீ.ஐ. மற்றும் பிரித்தானியாவின் ஸ்கொட்லன்யாட் பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்றையதினம் காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் இன்று மாலையில் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இம் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பாணந்துறை கிளையின் முன்னாள் உப செயலாளர் நேற்றுக்காலை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர், வீதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு பிரிவின், உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.