ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரை குறித்த நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை விதிப்பதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.