இலங்கையில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எப்.பீ.ஐ. மற்றும் பிரித்தானியாவின் ஸ்கொட்லன்யாட் பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் பயன்படுத்தும் அதி நவீன தொழிநுட்ப வசதிகள் எதுவுமின்றி இலங்கையின் புலனாய்வு பிரிவினர் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணை நடவடிக்கைகளை குறித்த வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.