கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும், இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதித் தடைகளை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பின் பிரதான இடங்கள் பலவற்றுக்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடியவரை பொதுமக்கள் அத்தியாவசிய பயணங்கள் அன்றி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாமல் வீடுகளில் இருப்பது பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் ஒத்துழைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.