கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களின் நிழற்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தேடப்படுபவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தொடர்பில் அறியக்கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.071 8 591 771, 011 2 422 176, 011 2 395 605 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.