கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.