சைனா ஈஸ்டன் விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 4 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை மே மாதம் 1ஆம் திகதி முதல் ரத்துச் செய்ய தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் , கொழும்பு மற்றும் பீஜிங் இடையிலான விமான சேவை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது. அதேபோல், சைனா சதர்ன் மற்றும் எயார் சைனா விமான சேவைகள் கொழும்பிற்காக தமது விமானப் பயணங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானத்தை செலுத்தி வருவதாக குறித்த விமான சேவை நிறுவனங்களின் உள்ளூர் முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.