தந்தை செல்வாவின் சிரார்த்ததின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் தந்தை செல்வா அறங்காவல் சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய ஜெபநேசன் அடிகள்,  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்,

திரு.சரவணபவன், டெலோ அமைப்பின் தவிசாளர் திரு.சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு மாகாணசபையின் தவிசாளர் திரு. சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் திரு.ஆனோல்ட், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், பரஞ்சோதி, மற்றும் வலிதென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் ஜெபநேசன் மேலும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், திரு.சிறில், கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன் இறை பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பலியான அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.