Header image alt text

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் ஆகிய இயக்கங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வருமாறு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால்

தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் – National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் – Jamathei Millathu Ibraheem zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more

இன்று கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் இன்று கைதானார். Read more

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன்படி இவர்களுக்கு குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வௌ;வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. Read more

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதலாவது தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். Read more

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15ய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறுவர்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்று மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர வீடொன்றில் இருந்து படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரொயிட்டர்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தக்காலத்தில் தம்மால் கட்டியெழுப்பப்பட்ட தீவிர கண்காணிப்பு கட்டமைப்பையும், புலனாய்வு வலையமைப்பையும் பலவீனப்படுத்தாது இருந்திருந்தால், இவ்வாறான தாக்குதல்களை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தி இருக்க முடியும். Read more

ஒரு தொகை வெடிபொருட்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.