இன்று கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் இன்று கைதானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் கொம்பனிவீதி பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, இந்த வாள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதேவேளை நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைத்தொலைபேசிக்கான பட்டகிள் 37உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.