Header image alt text

அம்பாறை, சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் குடும்பத்தினரே உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும் குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும் தெரியவருகின்றது.

காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாஷிம் மதனியா, சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேசத்துக்குள் கடந்த சில தினங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பறக்கும்  ட்ரோன் கமரா தொடர்பான விசாரணைகளை இன்றுகாலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ட்ரோன் கமராவானது கடந்த 3 நாள்களாக அடிக்கடி நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை முகாம், வண்ணாத்திவில்லு கடற்படை முகாம்களுக்கு மேலே பறந்துள்ளதுடன், இன்று அதிகாலையும் இந்த ட்ரோன் கமரா பறந்ததாக பிரதேசவாசிகளும், கடற்படையினரும் தெரிவித்துள்ளனர். Read more

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 03 பேருக்கு, கடந்த ஆண்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

வவுணதீவு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் 19ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவர் இனந்தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டன. Read more

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து.

நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து நேற்றுமாலை பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன் ஒருவர் அத்திவாரம் தோண்டியுள்ளார். இதன்போது அத்திவார குழிக்குள் இருந்து ஒரு பிளாஸ்டிக் பரல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. Read more