தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, 5 மாடிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குருநாகல்- தெலியாகொன்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பதிவு செய்யப்படாத 4 சிறிய வான்களும், 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடனும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வான்கள் கடந்த வாரம் கொச்சிக்கடைப் பகுதியில் தாக்குதல் நடத்த பயன்படுத்த திட்டமிட்டிருந்த வானை ஒத்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து 2 வாள்களும் 4 அலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.