தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளரை இன்று மேல்மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரது எத்துன்கஹகொட்டுவ வீட்டை சோதனைச் செய்து அவரைக் கைது செய்ததாகவும் சந்தேகநபர் 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் பிரதேசத்தின் மௌலவி ஒருவர் எனவும் பொலிஸார் கூறினர். குறித்த சந்தேகநபரின் வீட்டுக்கு 201 ஆம் ஆண்டு முதல் தேசிய தளஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் பல தடைவைகள் வந்து சென்றுள்ளதாகவும் அவரால் அங்கு இளைஞர் யுவதிகளுக்கு உபன்னியாசங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.