Header image alt text

கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும், 16 நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலா செல்வது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவித்துள்ளது. அத்துடன் நோர்வே, சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, மலேசியா, தாய்வான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. Read more

இலங்கையில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து,

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இன்றையதினம் காலை ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவர் ஸஹ்ரானின், ஊடகச் செயலாளரை, 72 மணித்தியாலங்களுக்கு விசாரணை செய்ய அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவானால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு, கோட்டை மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் எச்.எம் அலி உஸ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா மொஹிதீன் சுல்தான் என்பவர் 3 வாள்கள் மற்றும் மன்னாங் கத்தி ஒன்று கைது செய்யப்பட்ட பின்னர் அவரது சகோதரரான எச்.எம் அலி உஸ்மான் என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரிய, நாவல பகுதியில் உள்ள குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீட்டில் இருந்து இராணுவத்தினரின் யுத்த இறுவட்டு ஒன்றும் லெப்டொப் கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.

தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை, சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். EP – PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. Read more

ஐ.எஸ் பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல்மாகாண உளவுப் பிரிவினர் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார், புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நேற்றுமாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தினை சோதனையிட்டபோது மலசலகூடத்தின் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 02 கைக்குண்டு, 03 மிதிவெடி, 15 தோட்டாக்கள், 02 ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை தொடக்கம் மாலைவரை இடம்பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ எஸ் பயங்கரவாதியான சஹ்ரான் காசிமின் உரையாற்றிய 16 இறுவட்டுகளை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பிரதேசத்தில் நேற்று முழுவதும் திடிர் சோதனை நடவடிக்கைகள் வீடு வீடாகச் சென்று கந்தளாய் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலே 16 இறுவட்டுகளுடன் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட மொஹமட் சஹ்ரானின் காசிமின் சகோதரர்கள் இருவர்

இந்தியாவின் கேரளாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.