திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ எஸ் பயங்கரவாதியான சஹ்ரான் காசிமின் உரையாற்றிய 16 இறுவட்டுகளை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பிரதேசத்தில் நேற்று முழுவதும் திடிர் சோதனை நடவடிக்கைகள் வீடு வீடாகச் சென்று கந்தளாய் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலே 16 இறுவட்டுகளுடன் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர் காத்தான்குடி பகுதியை பூர்வீகமாக கொண்டதோடு, கந்தளாய் பகுதியில் தொழில் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் படையினரால் சோதனை மேற்கொண்டபோதே பயங்கரவாதியை சஹ்ரான் காசிமின் உரையாற்றிய இறுவட்டுகள் 16வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை கந்தளாய் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதோடு, தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.