மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை தொடக்கம் மாலைவரை இடம்பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நேற்றையதினம் காலை முதல் மன்னாரின் பல்வேறு இடங்களில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.