வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார், புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நேற்றுமாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தினை சோதனையிட்டபோது மலசலகூடத்தின் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 02 கைக்குண்டு, 03 மிதிவெடி, 15 தோட்டாக்கள், 02 ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இப் பொருட்களை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உணவக உரிமையாளரை கைதுசெய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவகம் தொடர்பாக அண்மைகாலமாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.