அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிழற்குடை திறப்பு விழா மற்றும் மாணவர், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (16.04.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3..30மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. க.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் (பொருளாளர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), ஐயம்பிள்ளை ஜசோதரன் (நிர்வாக செயலாளர் -FEED), க.தவராஜா (தவிசாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை, செயற்குழு உறுப்பினர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), வே.சிவபாலசுப்பிரமணியம் (செயற்குழு உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகியோரும், Read more
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, வற்றாப்பளை சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த தனுஷ்ஷன் என்ற 20வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், டொனியர் ரக கண்காணிப்பு விமானமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறதென, இந்தியாவின் டைமஸ் நியு செய்தி சேவை தெரிவித்துள்ளது.
துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று, அந்நாட்டு செய்தி நிறுவனமான எனடொலு செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 2.30 மணியளவில் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு இளைஞரொருவர் இன்றுகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் என காவற்துறை தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைகழக மாணவிக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக 25000/- வழங்கப்பட்டது.