Header image alt text

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமன கடிதத்தைப் பெற்றார்.

இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more

தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளரை இன்று மேல்மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரது எத்துன்கஹகொட்டுவ வீட்டை சோதனைச் செய்து அவரைக் கைது செய்ததாகவும் சந்தேகநபர் 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் பிரதேசத்தின் மௌலவி ஒருவர் எனவும் பொலிஸார் கூறினர். Read more

தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, 5 மாடிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினராலும் 15 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அம்பாறையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து, தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் இருந்த பெண்கள் அணியும் வெள்ளை நிற ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்கள் குறித்த ஆடைகளை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

யாழ். தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினர் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு சோதனையிட்டபோது இராணுவம் பயன்படுத்தும் உடல் கவசம், கொமாண்டோ படைப்பிரிவினர் பயன்படுத்தும் நீர் பை டி-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன மீட்கப்பட்டன. Read more

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநாச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது. கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. Read more

வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களின் 22 அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி பள்ளிவாசல்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். Read more

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த 8 தற்கொலைக் குண்டுதாரிகளும் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில், புலனாய்வு பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் 6 வான்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், கெப் ரக வாகனம் ஒன்று என்பன குறித்த தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. குறித்த 18 வாகனங்களில் 6 வாகனங்கள் மாத்திரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த மற்றுமொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 27ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நாவற்குடாவினை சேர்ந்த சுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.