Header image alt text

வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில், 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறது. Read more

முல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, அவரின் 15 வயதுடைய சகோதரி இந்த மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திலும் பலத்த மின்னல் மற்றும் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. Read more

வளர்ப்பு நாயால் அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடால் ஏற்பட்ட கைகலப்பில்  3 பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர், செம்மணி வீதியில் செட்டத்தெரு தோட்டம் பகுதியில், கடந்த வாரம் இரு குடும்பாத்தருக்கு இடையே வளர்ப்பு நாயால் முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நாய் வளர்க்கும் குடியிருப்பாளரின் மனைவி மற்றும் அவரது மகன், மகள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை ஒன்றுக்காக சென்றுவிட்டு புதன்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். Read more

இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் ‘மில்லிநோகேட் ‘மற்றும் யு.எஸ்.எஸ் ‘இஸ்ப்ருவன்ஸ் ‘ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் வந்தடைந்தன.

வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இரண்டையும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பலானது 2362 தொன் நிறைகொண்டதுடன் 155.3 மீட்டர் நீளம் கொண்டதாகும். Read more

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக குறித்த பஸ் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது. பாதையை விட்டு விலகிய பஸ் ஏ9 வீதியில் அமைந்துள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. Read more

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க் விஜயம் செய்துள்ள நிலையில், நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கையின் பேண்தகுதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் உறுதியளித்துள்ளார். Read more

அரச நிறுவனங்களுக்கு வருகைதரும் விசேட தேவையுடையவர்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு சில அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசேட தேவையுடைய கலாநிதி அஜித் பெரேரா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை தீர்ப்பானது, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமால் விசாரிக்கப்பட்டு இன்று எட்டு அரச நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு சிறுவர் துஷ்பிரேயோகங்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் 12,093 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, குறித்த திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்குரிய செயற்திறன் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 1,187 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் இரண்டாவதாக குருநாகல் மாவட்டத்திலிருந்து 1,084 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு குறித்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஜகர்த்தாவில் இருந்து வருகை தந்த லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL365 என்ற விமானம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த ஸ்ரீரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ருடு 365 என்ற விமானங்களும் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் எயார் கொமாண்டர் முஸ்தபா அன்வர், தலைமையிலான பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவினருடனான இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more