Header image alt text

இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத தற்கொலைதாரிகள் 9 பேரின் முழுமையான விபரங்களும் வெளியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்த இடம், அவர்களின் உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தற்கொலை தாரிகளின் அனைத்து சொத்துக்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தடை விதிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

1. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் அலாவுதீன் அஹமட் முனாஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் 121/3 சென்றல் வீதி மட்டக்குளியில் வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனியார் விருந்தகம் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு சோடி இராணுவ பாதணிகள், இராணுவ சீருடை, ஜக்கட் ஒன்று, தொலைபேசி சிம் அட்டைகள், கத்தி ஒன்று, தொலைநோக்கி கருவி ஒன்று, தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டன. Read more

மே மாதம் முதலாம் நாள் தொழிலாளர் வர்க்கத்தின் காத்திரமான போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை குறிக்கும் நாள். ஆனால் இப்போது தொழிலாளர்கள் தமது வெற்றிக்காக போராடும் நாளாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்டது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவு, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு துருவ உலக ஒழுங்கு, உலக தாராளமயமாக்கல், தேசிய இனங்களின் எழுச்சி என்று நாம் கண்ட அனைத்து விடயங்களுமே, தொழிலாளர்கள் என்றொரு வர்க்கத்தினர் உலகம் பூராவும் நலிவடைந்து, பிளவுபட்டு, தனித்துவங்களை இழக்க காரணமாகி விட்டதை உணர்கின்றோம்.

தேசிய இனசிக்கலில் தொழிலாளர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மட்டுமன்றி அவர்களது ஒற்றுமையும், அமைப்பு ரீதியான செயற்பாடுகளும்கூட காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இனரீதியாக, மதரீதியாக, பிரதேச ரீதியாக பிரித்து வைக்கப்பட்டு விட்டனர். தனது நலன்களை தேவைகளை முதலில் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்ற மனநிலைக்குள் புகுத்தப்பட்டுள்ளனர். தேசிய இனகுழுக்களின் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உள்ளுர்த் தலைவர்கள் என்று சகலருமே இதற்கு பொறுப்பாளிகள்தான். Read more

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய ஒருவர் குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய, சுபாரதிபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து செய்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் இன்றுபகல் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் இராணுவ தேடுதலில் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமான காணியில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more

பதுளை நகரின் மத்தியிலுள்ள சிறைச்சாலைக்கு 12 அடி தொலைவிலுள்ள வீடொன்றில் 3 அறைகளுடனான பதுங்கு குழியொன்று பதுளை பொலிஸாரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது, அங்கு பதுங்கு குழியொன்று காணப்பட்டதுடன், இதில் 2 அறைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, மற்றொரு அறை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதலை நியாயப்படுத்தி, இணையத்தில் காணொளியை வெளியிட்ட மௌலவி ஒருவர், மத்திய கிழக்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா- செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பட்டானிச்சூர் பள்ளிவாசலின் பிரதானி என்றும், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்துக்கு மறுநாள், உலகமே இஸ்லாம் நாடாக மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தனது கௌரவத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக தெரிவித்து, இவரால் காணொளியொன்று வெளியிடப்பட்டது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவிற்கு இலங்கையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் இருக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவையிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் உறுப்பினர்கள் மேலும் இருக்கலாம் என நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிசாரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது. Read more

நாட்டினுள் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போட கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தின் மூலம் ஜனநாயகம் இழக்கப்படுவதாகவும் தேர்தலின் மூலமும் இதுவே இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குண்டுகள் வெடித்திருந்தாலும் உயிர்கள் இழக்கப்பட்டிருந்தாலும் இந்நாட்டில் தேர்தல் இடம்பெற்ற சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more