உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவிற்கு இலங்கையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் இருக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவையிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் உறுப்பினர்கள் மேலும் இருக்கலாம் என நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த குழுவினர் இதுவரை முற்றாக செயலிழக்க செய்யப்படவில்லை என நாங்கள் கருதுவதற்கான காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.