இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத தற்கொலைதாரிகள் 9 பேரின் முழுமையான விபரங்களும் வெளியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்த இடம், அவர்களின் உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தற்கொலை தாரிகளின் அனைத்து சொத்துக்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தடை விதிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

1. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் அலாவுதீன் அஹமட் முனாஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் 121/3 சென்றல் வீதி மட்டக்குளியில் வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2. சங்கரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்தியவர் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட் ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் முஹதீன் பள்ளிவாசல் வீதி, காத்தான்குடி-3 ஐச் சேர்ந்தவர். மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட் மாவில பூங்கா, பேஸ்லைன் வீதி, தெமட்டகொடயைச் சேர்ந்தவர்.
3. சினமன் க்ராண்ட் விருந்தகத்தில் தாக்குதல் நடத்தியவர் மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் என்றும் அவர் மஹாவில பூங்கா, பேஸ்லைன் வீதி, தெமட்டகொடயைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் அவர் சங்ரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் சகோதரர் ஆவார்.
4. கிங்ஸ்பெரி விருந்தகத்தில் மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக் என்பவரினால் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவர் புதிய யோன் வீதி கொழும்பு 12 ஐச் சேர்ந்தவர்.
5. தெஹிவளை ட்ரொபிகல் இன் விடுதியில் அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்ற கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவரினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
6. தெமட்டகொடை பகுதியில், ஃபாதிமா இல்ஹாம் என்ற பெண்ணினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர், ஷங்ரிலா விருந்தகத்தில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இல்ஹாமின் மனைவியாவார். அவர் மஹவில பூங்கா தெமட்டகொடயைச் சேர்ந்தவர்.
7. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயத்தில் மொஹமட் மொஹமட் ஹஸ்துன் என்பவரினால், தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர் AFC வீதி, வாழைச்சேனையைச் சேர்ந்தவர்.
8. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மொஹமட் நஸார் மொஹமட் அசாத் என்ற கனத்த வீதி, புதிய காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவரால் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.