நாட்டினுள் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போட கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தின் மூலம் ஜனநாயகம் இழக்கப்படுவதாகவும் தேர்தலின் மூலமும் இதுவே இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குண்டுகள் வெடித்திருந்தாலும் உயிர்கள் இழக்கப்பட்டிருந்தாலும் இந்நாட்டில் தேர்தல் இடம்பெற்ற சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டினுள் நிலவும் தற்போதைய நிலமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போடுவதன் ஊடாக ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.