யாழ். தென்மராட்சி பாலாவிப் பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில் இருதரப்பிலும் முப்பது பேர் அடங்கிய குழு வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் கூரிய ஆயுதம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், அதே இடத்தைச் சேர்ந்த சேர்ந்த 25 வயதான யே.திலிசாந், 39 வயதான சோ.கணேசமூர்த்தி, 46 வயதான தம்பிராஜா யோகராஜா, 38 வயதான த. கவிதரன், 52 வயதான நடராஜா வளர்மதி, 35 வயதான செல்வராஜா குமார் மற்றும் 39 வயதான வைரமுத்து தவசீலன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளளனர். கொடிகாமம் – பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பேலிப் பகுதிகளில் இந்த வராத்தினுள் இது மூன்றாவது வாள்வெட்டாகும்.