பதுளை நகரின் மத்தியிலுள்ள சிறைச்சாலைக்கு 12 அடி தொலைவிலுள்ள வீடொன்றில் 3 அறைகளுடனான பதுங்கு குழியொன்று பதுளை பொலிஸாரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது, அங்கு பதுங்கு குழியொன்று காணப்பட்டதுடன், இதில் 2 அறைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, மற்றொரு அறை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.