முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனியார் விருந்தகம் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு சோடி இராணுவ பாதணிகள், இராணுவ சீருடை, ஜக்கட் ஒன்று, தொலைபேசி சிம் அட்டைகள், கத்தி ஒன்று, தொலைநோக்கி கருவி ஒன்று, தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டன. இவை முல்லைத்தீவு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை கேகாலை – கொட்டியாகும்புர பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்கு அருகில் இருந்து வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பாடல் சாதனங்களும் மீட்கப்பட்டதுடன், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பகுதியில் இராணுவம் இன்று நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்த பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் கேகாலை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.