இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய ஒருவர் குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய, சுபாரதிபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து செய்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தெஹிவளை- களுபோவில, வைத்தியசாலை வீதியோரத்திலிருந்து விமானப் படையினரின் சீருடைகள் அடங்கிய பொதியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான பொதியொன்று கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்த ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.