Header image alt text

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1984 முதல் சுவிஸ் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புளொட் சுவிஸ் உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் ஊர்வலமானது, முப்பத்தைந்தாவது வருடமாக இம்முறையும் நடைபெற்றது.

இம்முறை இதில் ‘தமிழினத்தின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காண வேண்டும், வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்க வேண்டும்.
அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம். Read more

தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், ரிழ்வானின் மாமனார் மற்றம் மாமியார் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார். ரிழ்வானின் மனைவியும் பலியாகிவிட்டார். Read more

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்துபொல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தன.

இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்தே, இந்தத் தேடுதல் நடவடிக்கைகளை இன்று முன்னெடுக்கப்பட்டன. கைவிடப்பட்டிருந்த மூன்று வீடியோ கமெராக்கள், இரு வாள்கள், காடுவெட்டும் கத்திகள்-3, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இலங்கையில் பாவனைக்கு அனுமதியில்லாத இரத்தம் எடுக்கும் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அடுத்தவாரம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளபோதிலும்,

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை அடுத்தவாரமும் திறக்க வேண்டாமென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, பூநகரி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியல் உயிரிழந்த நபரின் காணியில் இன்றுகாலை 7 மணியளவில் யானை தென்னங்கன்றுகளை உணவாக உட்கொண்டு இருந்தவேளை, குறித்த யானையை துரத்த முற்பட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிவநேயசன் சுகாசினி என்ற தாயார் உயிரிழந்ததுடன், அவரது 3 வயது பெண் பிள்ளையும் படுகாயமடைந்துள்ளார். Read more

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இரானுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழூவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா கோவில்குளம் பகுதியில் இன்று காலை இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்திருந்தனர். அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் சென்று அனைத்து இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டை பதிவினையும் மேற்கொண்டனர். Read more

கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை முதலான பகுதிகளில் நேற்றிரவு 9 மணிமுதல் அமுலாக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இதேநேரம், நாடுமுழுவதும் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் இராணுவத்தினரால் பல்வேறு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக, இராணுவ பேச்சாளர் ப்ரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். Read more

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கல்முனை – கல்முனைகுடி பிரதேசத்தில் காவற்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து இரத்த கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு கொண்ட கார் ஒன்றும் மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைபேசியொன்றும் காவற்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. Read more

கற்பிட்டி, மண்டலகுடா பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், கார் ஒன்று மற்றும் 03 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது கைதானவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். Read more

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல்

புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு விசமிகளினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர். Read more