நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அடுத்தவாரம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளபோதிலும்,

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை அடுத்தவாரமும் திறக்க வேண்டாமென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.