கற்பிட்டி, மண்டலகுடா பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், கார் ஒன்று மற்றும் 03 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது கைதானவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ பகுதியில் ட்ரோன் கெமராவுடன் 29வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ திஹாரிய, கஹட்டோவிட்ட பகுதியில் வைத்தே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.