பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கல்முனை – கல்முனைகுடி பிரதேசத்தில் காவற்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து இரத்த கறையுடன் கூடிய ஈ.பி.கே.எம் 5059 என்ற இலக்கத் தகடு கொண்ட கார் ஒன்றும் மற்றும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொலைபேசியொன்றும் காவற்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்முனை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது