கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை முதலான பகுதிகளில் நேற்றிரவு 9 மணிமுதல் அமுலாக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இதேநேரம், நாடுமுழுவதும் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் இராணுவத்தினரால் பல்வேறு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக, இராணுவ பேச்சாளர் ப்ரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.இதேநேரம், உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து 25 லட்சம் ரூபா பணத்துடன் மட்டக்களப்பு காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.