அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்துபொல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தன.

இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்தே, இந்தத் தேடுதல் நடவடிக்கைகளை இன்று முன்னெடுக்கப்பட்டன. கைவிடப்பட்டிருந்த மூன்று வீடியோ கமெராக்கள், இரு வாள்கள், காடுவெட்டும் கத்திகள்-3, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இலங்கையில் பாவனைக்கு அனுமதியில்லாத இரத்தம் எடுக்கும் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன், சந்தேகத்தின் பேரில் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸார், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதேவேளை ஐஸ்.எஸ். ஐஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தனரென்றக் குற்றச்சாட்டில், தர்காநகர்-வெலிபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, 3 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்காநகரர்-வெலிபிடிய பிரதேசத்தில் 500 வீடுகள் இன்று சோதனையிடப்பட்டன. இதற்கென, 2,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7 மணிநேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 20 அடையாள அட்டைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.