Header image alt text

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படுகிற சஹ்ரான் ஹசீமின் மைத்னுனரான ரிலா மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் புலனாய்வு தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாற்று பெயர்களில் இவ்வாறு சவூதி அரேபியா சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், கொழும்பின் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவரின் மனைவியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரிடம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். Read more

கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது ஆறுபேரையும் நேற்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. நேற்று குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கிளிநாச்சி நீதவான் நீதிமன்றம், குறித்த ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளது. Read more

புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலேரியா கால்வாய்க்கு அருகில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புத்தளம் – மலேரியா கால்வாய்க்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான பையொன்று கிடப்பதாக, தனக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து, அங்கு சென்று குறித்த பையை சோதனை செய்த போதே, ரி 56 ரக துப்பாக்கி ஒன்று இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக, புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன, நேற்று தெரிவித்தார். Read more

இலங்கையில் நிரந்தர இராணுதளமொன்றை அமைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்  தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகங்களில் நான் இதனை தொடர்ந்தும் வாசித்து வருகின்றேன் ஆனால் நான் உங்களிற்கு உண்மையை தெரிவிக்கவேண்டும்  அமெரிக்காவிடம் அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர். கல்லடி 231 ஆவது படைப்பிரிவினரே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த நபர் நேற்று மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இரண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தகவலையடுத்து அங்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பொதிகளை மீட்டு சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 இந்திய அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளமை ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக மாநில முதலமைச்சர் எம்.டி.குமாரசுவாமி தகவலுக்கு அமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 21ம் திகதி கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது 6 அரசியல்வாதிகளும் உயிரிழந்துள்ளனர். Read more