கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 இந்திய அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளமை ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக மாநில முதலமைச்சர் எம்.டி.குமாரசுவாமி தகவலுக்கு அமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 21ம் திகதி கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது 6 அரசியல்வாதிகளும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கர்நாடகா மாநிலத்தின் பிரதான கட்சியை சேர்ந்த 4 அரசியல் பிரபலங்களும், காங்கிரஸ் கட்சியை இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஷங்கிரிலா ஹோட்டலின் உணவகத்தில் இருந்த லக்ஷ்மன் கோவிந்தா ரமேஷ், கே.லக்ஷ்மி நாரயாயன், எம்.ரங்கராஜா மற்றும் கே.ஜீ.ஹமுத்த ரங்கப்பா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.நாகராஜ் மற்றும் சிவகுமார் ஆகியோரும் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.