இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், கொழும்பின் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அவரின் மனைவியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரிடம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். அவரும், சஹரானும் கொழும்பில் சில இடங்களில் முன்னர் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், சஹ்ரானின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.