உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படுகிற சஹ்ரான் ஹசீமின் மைத்னுனரான ரிலா மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் புலனாய்வு தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாற்று பெயர்களில் இவ்வாறு சவூதி அரேபியா சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையின் தீவிரவாத தாக்குதலுக்காக தாம் தான் காரணம் என ஐ எஸ் அமைப்பு பொருப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.