நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பின் ஊடாக பாதுகாப்பு சூழல் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரும் தூதரகங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். விஷேட பாதுகாப்பு படை குழுவொன்று இதற்கென இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.